குருகிராமில் பட்டாசு வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
குருகிராமில் வீட்டில் பட்டாசு வெடித்த சம்பவத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

ஆம்பூர் காலணி தொழிற்சாலையில் தீ விபத்து
குருகிராமில் வீட்டில் பட்டாசு வெடித்த சம்பவத்தில் மேலும் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
அக்டோபர் 12-ம் தேதி நகக்ரோலா கிராமத்தில் உள்ள வீட்டில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
வெடி விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் மூவர் உயிரிழந்த நிலையில், இன்று தீயில் கருகிய மேலும் மூவர் உயிரிழந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள், தனுஜ் (14) விஷ்ணு காந்த் (40) ஆகியோர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை இறந்தனர், சதீஷ்(40) புதன்கிழமை இரவு இறந்தார்.
முன்னதாக, வீட்டின் உரிமையாளரான பகவான் தாஸ் என்கிற கலா (40), அவரது மகன் மனீஷ் (20), மகள் சாவி (10) ஆகியோர் அக்டோபர் 16 ஆம் தேதி இறந்தனர்.
வீட்டின் உரிமையாளர் தாஸ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தாஸ் திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப் பட்டாசுகளை விநியோகம் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...