

தீபாவளியை முன்னிட்டு பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயிலை தரிசனம் செய்ய உள்ளார்.
பிரமாண்டமாகத் தயாராகிவரும் ராமர் கோயிலி கட்டும் இடத்தையும் மோடி ஆய்வு செய்து, பின்னர், ராமருக்கு அடையாளமாக முடிசூட்டு விழா நடத்துவார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று மாலை 6.30 மணியளவில் சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி நிகழ்ச்சியை பிரதமர் நேரில் காண்பார் என்றும், அதைத் தொடர்ந்து பிரம்மாண்ட தீப உற்சவத்தை அவர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்தாண்டு நடைபெறும் ஆறாவது தீப உற்சவ விழாவில், முதல் முறையாக மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் 15 லட்சத்திற்கு அதிகமான விளக்குகள் (மண் விளக்குகள்) ஏற்றப்படும்.
தீப உற்சவ திருவிழாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நடனக் கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
சரயு நதிக்கரையில் உள்ள ராம் கி பைடியில் 3-டி ஹாலோகிராபிக் ப்ரொஜெக்ஷன் மேப்பிங் ஷோ, பிரமாண்டமான மியூசிக்கல் லேசர் ஷோ ஆகியவற்றையும் மோடி பார்வையிடுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.