ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைஃபை வசதிகளுடன் கிடைக்கக் கூடிய அதிவேக 5ஜி சேவையினை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோயில் நகரமான நத்வாராவில் தொடங்கியுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான ரயில் நிலையங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இந்த வைஃபை வசதிகளுடன் கூடிய இந்த 5ஜி சேவை தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தனுஷின் 'நானே வருவேன்': ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவைகளை சென்னையிலும் தொடங்கியுள்ளது. அதே போல சில சலுகைகளையும் ஜியோ நிறுவனம் வழங்கியுள்ளது.
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் ஆகாஷ் அம்பானி கூறியதாவது: நாங்கள் வைஃபை வசதிகளுடன் கூடிய 5ஜி சேவையை புனித நகரமான நத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் தொடங்கியுள்ளோம். அதேபோல சென்னை நகரிலும் 5ஜி சேவைகளை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றார்.
இதையும் படிக்க: சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!
இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறியதாவது: ஜியோ வைஃபை வசதிகளுடன் கூடிய அதிவேக 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்த அதிவேக 5ஜி இணைய சேவை வழங்கப்படும். 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜியோ அதிவேக 5ஜி இணைய சேவை வழங்கப்பட்டிருக்கும் என்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.