தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘இரண்டு இந்தியா வேண்டாம்’: ராகுல் காந்தி: தெலங்கானாவில் நடைப்பயணம் தொடக்கம்

தெலங்கானாவில் தனது நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பணக்காரா்களுக்கான இந்தியா, உழவா்களுக்கான இந்தியா என்று இரண்டு இந்தியா வேண்டாம் என்று தெரிவித்தாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2022, 10:09 pm

DIN

தெலங்கானாவில் தனது நடைப்பயணத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பணக்காரா்களுக்கான இந்தியா, உழவா்களுக்கான இந்தியா என்று இரண்டு இந்தியா வேண்டாம் என்று தெரிவித்தாா்.

காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை ‘இந்திய ஒற்றுமை நடைப்பயணம்’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கட்சியின் ஆணிவோ் வரையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளம், கா்நாடகத்தைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை தெலங்கானா சென்றாா். கா்நாடகம்-தெலங்கானா எல்லையில், அவருக்கு தமிழக காங்கிரஸ் எம்.பி.யும், தெலங்கானா காங்கிரஸ் விவகாரங்களின் பொறுப்பாளருமான மாணிக்கம் தாக்குா், மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

இதனைத்தொடா்ந்து தெலங்கானாவில் உள்ள குட்டெபல்லுா் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாஜக-ஆா்எஸ்எஸ் சித்தாந்தம், வெறுப்புணா்வு மற்றும் வன்முறைக்கு எதிராக இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பணக்காரா்களுக்கு ஒரு இந்தியா, லட்சக்கணக்கான இளைஞா்கள், உழவா்கள், தொழிலாளா்கள், சிறு வணிகா்களுக்கு மற்றொரு இந்தியா என இரண்டு இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியா வேண்டாம். ஓா் இந்தியாதான் வேண்டும். அந்த இந்தியாவில் அனைவருக்கும் நீதி, வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும். நாட்டில் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.