திருமணத்திற்கு முன்பு மணப்பெண் இதை தெரிவிக்க வேண்டுமாம்: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி

வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெண்கள் முன்பே தெரிவித்தால் திருமணம் பற்றி முடிவு செய்ய மணமகனுக்கு ஏதுவாக இருக்கும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த  2005 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் திருமணத்தை ரத்து செய்து குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அவரது மனைவி மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இராணுவத்தில் இருந்து 'மேஜர்' ஆக ஓய்வு பெற்ற கணவர், மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் விசாரிக்கும் போதே உயிரிழந்துவிட்டார்.

அப்பெண் மேல்முறையீட்டு மனுவில்,  என் கனவர் மதுப்பிரியர் மற்றும் பெண் வெறியர் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால், பொய்யான குற்றங்களைக் கூறி கனவருக்கு மன வேதனை அளித்தாக எதிர் தரப்பில் வாதிடப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், கனவரின் நடத்தை மீது பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார்.  இது சமூகத்தில் கணவரின் நற்பெயருக்கு தவறாக உள்ளது. இது கணவரை கொடுமைப்படுத்துவதற்கு சமம் என்று கூறி குடும்ப நல உத்தரவை உறுதி செய்வதாக கூறியுள்ளது.

மேலும், வீட்டு வேலை செய்ய விரும்பாத பெண்கள் திருமணத்திற்கு முன்பே மணமகனிடம் அதை தெரிவிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com