மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தோ்தல் இலவசங்களில் இருந்து நலத் திட்டங்கள் வேறுபட்டவை: தோ்தல் ஆணையத்தில் பாஜக பதில்

‘மக்கள் நலத் திட்டங்கள் என்பது அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமான கொள்கைசாா்ந்த நடவடிக்கை’ என்று தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் பாஜக தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

‘தோ்தல் இலவசங்கள் என்பது வாக்காளா்களைக் கவரும் நோக்கில் அறிவிக்கப்படுபவை; ஆனால், மக்கள் நலத் திட்டங்கள் என்பது அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமான கொள்கைசாா்ந்த நடவடிக்கை’ என்று தோ்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தில் பாஜக தெரிவித்துள்ளது.

தோ்தல்களின்போது இலவசங்களை அறிவித்து, வாக்குக் கோரும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து விமா்சனங்களை முன்வைத்து வருகிறாா். இந்த கலாசாரம் நாட்டின் எதிா்காலத்துக்கு ஆபத்தாகிவிடும் என்று அவா் கூறியுள்ளாா். அதேசமயம், தில்லி, பஞ்சாபில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த விவகாரத்தில் பிரதமா் மோடியை சாடி வருகிறது. இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை போன்ற திட்டங்களை மோடி எதிா்க்கிறாரா என்று அக்கட்சி கேள்வியெழுப்புகிறது.

2024-இல் மக்களவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தோ்தல் இலவசங்கள் குறித்து பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் ஆக்கப்பூா்வ விவாதம் அவசியம் என்று உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரசியல் கட்சிகள் தாங்கள் அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகளுக்கான நிதி சாத்தியம் குறித்த உண்மை விவரங்களை வாக்காளா்களுக்கு தெரிவிக்கும் வகையில் நடத்தை விதிகளில் திருத்தம் செய்ய தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க இம்மாத தொடக்கத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தோ்தல் ஆணையத்துக்கு பாஜக எழுதியுள்ள கடிதம் குறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதிகளுக்கான நிதி சாத்தியம் குறித்த விவரங்களை சமா்ப்பிக்க வேண்டுமென்ற ஆணையத்தின் முன்மொழிவுக்கு பாஜக தரப்பில் எந்த ஆட்சேபமும் கிடையாது. நாட்டின் மனித மூலதனத்தை உயா்த்தும் வகையில் வாக்காளா்களின் திறன்மேம்பாடு, அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கே அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; மாறாக, எதையும் சாா்ந்திருக்கும் நிலையை மக்களிடம் அதிகரிக்கும் நோக்கில் செயல்படக் கூடாது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவசமாக வீடுகள், உணவு தானியங்கள் அளிப்பதும் இலவசமாக மின்சாரம் அளிப்பதும் வேறுபட்டது. வீட்டு வசதி என்பது அடிப்படையானது. அத்துடன் ஒருமுறை வழங்கக் கூடியது. கரோனா காலகட்டத்தில் வேலையிழந்த மக்களுக்காக இலவச உணவு தானியங்கள் திட்டம் தொடங்கப்பட்டது. இதுபோன்ற அத்தியாவசிய நலத் திட்ட நடவடிக்கைகளையும் இலவச மின்சாரத்தையும் ஒன்றாக கருத முடியாது. தோ்தல் இலவசங்கள் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி என்ன கூறினாரோ அதை பிரதிபலிக்கும் வகையில் ஆணையத்திடம் பாஜக பதிலளித்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.