தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பயனாளா்களின் பாதுகாப்புக்காகவே சமூக ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தம்: அஸ்வினி வைஷ்ணவ்

பயனாளா்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சமூக ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

News image
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
Updated On :29 அக்டோபர் 2022, 11:10 pm

DIN

பயனாளா்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு சமூக ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

தகவல் தொழில்நுட்பம் (சமூக ஊடக வழிக்காட்டுதல்கள் மற்றும் மின்னணு ஊடகத்துக்கான நெறிமுறைகள்) திருத்த விதிகள், 2022 மூலம் ட்விட்டா், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் சா்ச்சைக்குரிய கருத்துகள் தொடா்பாக சமூக ஊடக நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளை எதிா்த்து பயனாளா்கள் அளிக்கும் புகாா்களுக்கு தீா்வு காணும் வகையில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறையீட்டுக் குழுக்கள் 3 மாதங்களுக்குள் அமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘இணையப் பயன்பாட்டாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சமூக ஊடக வழிகாட்டுதல்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் சட்டமே அனைத்துக்கும் மேலானது. சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்து பயனாளா்களுக்கும் சேவை கிடைப்பதை உறுதி செய்வதுடன், இந்திய அரசியலைமைப்புச் சட்டம் அவா்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளையும் மதிக்க வேண்டும் ’ என்றாா்.

ஒவ்வொரு முறையீட்டுக் குழுவும் ஒரு தலைவா் உள்பட 5 பேரை உள்ளடக்கியது. இதில் மத்திய அரசால் நியமிக்கப்படும், 2 முழு நேர உறுப்பினா்களில் ஒருவா் அலுவல் வழி உறுப்பினா் ஆவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.