நாட்டை உலுக்கிய கோர விபத்து: விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்பு!

குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 132 அதிகரித்துள்ள நிலையில், இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவி
நாட்டை உலுக்கிய கோர விபத்து: விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்பு!



குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 132 அதிகரித்துள்ள நிலையில், இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தின்போது குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகருக்கு மேற்கே 240 கிமீ தொலைவில் உள்ள மோர்பி நகரில் உள்ள மச்சு நதி மீது 230 மீட்டா் நீள தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள் சுற்றுலா வரும் முக்கிய இடமாக இந்தப் பாலம் திகழ்கிறது.

கடந்த 6 மாதங்களாக அந்தப் பாலத்தில் தனியாா் நிறுவனம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதையொட்டி மூடப்பட்டிருந்த அந்தப் பாலம், புனரமைப்புப் பணிகள் முடிந்து ஐந்து நாள்களுக்கு முன்பு (அக். 26) குஜராத்தி புத்தாண்டன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அந்தப் பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரளானோா் பாலத்துக்கு வந்திருந்தனா். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம்  மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவா்கள் நதியில் விழுந்தனா். தேசிய பேரிடா் மீட்புப் படையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது, 60 பேர் இன்னும் காணவில்லை. பாலத்தில் தொங்கிக் கொண்டிருந்த சுமார் 5-10 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.” காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முப்படைகள், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் மாத புனரமைப்புக்கு பின், திறப்பட்ட 4 நாள்களில் நிகழ்ந்த மிக்பெரிய கோர விபத்துக்கு பாலத்தில் ஏாளமானோர் கட்டுப்பாடின்றி அனுமதிக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது.

தொங்கு பாலத்தை புனரமைக்க அரசிடம் டெண்டரைப் பெற்று பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம், பணி முடிந்த பின் அதிகாரிகள் பாலத்தின் உறுதித்தன்மையை பரிசோதித்து அதற்கான சான்றிதழை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில், குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்த கோர விபத்தால் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த கோர விபத்துக்கு குஜராத் அரசு முழு பொறுப்பேற்தாக அம்மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

தொங்கு பாலம் அறுந்து விழுந்த இந்த கோர விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.

இந்த கோர விபத்து சம்பவத்தை அடுத்து குஜராத்தில் பங்கேற்க இருந்த சில நிகழ்ச்சிகளை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com