அண்ணன் - தங்கையின் கட்சியாக மாறிய காங்கிரஸ்: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் பின்னர் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசலாம் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா காங்கிரஸினை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்ணன் - தங்கையின் கட்சியாக மாறிய காங்கிரஸ்: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் முதலில் தங்களுக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் பின்னர் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து பேசலாம் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா காங்கிரஸினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸில் இருந்து மூத்தத் தலைவர்கள் பலரும் விலகி வரும் நிலையில் அவரது இந்த விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஹரியாணாவில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட ஜெ.பி.நட்டா இதனைத் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் குடும்பக் கட்சி எனவும் தாக்கிப் பேசினார்.

பேரணியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் நட்டா பேசியதாவது: “ காங்கிரஸ் கட்சியிடம் எந்த ஒரு கொள்கையும் இல்லை. காங்கிரஸ் இப்போது தேசியக் கட்சியும் இல்லை. காங்கிரஸ் பிராந்தியக் கட்சியும் கூட இல்லை. காங்கிரஸ் தற்போது அண்ணன் - தங்கையின் கட்சியாக மாறியுள்ளது. கட்சிக்காக 50 ஆண்டு காலம் தங்களது ரத்தம் மற்றும் வியர்வையை சிந்தி உழைத்தவர்களை காங்கிரஸ் கைவிட்டு விட்டது. அவர்கள் ஏன் கட்சியிலிருந்து விலகுகிறார்கள் என நீங்கள் யோசித்தீர்களா? மூத்தத் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகுவது அவர்களிடையே இருக்கும் ஒற்றுமையின்மையைக் காட்டுகிறது. முதலில் அவர்களது கட்சியில் இருப்பவர்களை ஒன்றிணைக்க வேண்டும். பின்னர், இந்த பாரத் ஜோடா பாத யாத்திரை குறித்து பேசலாம்.

பாஜக மற்றும் அதனால் மாநிலங்களில் அமைந்துள்ள அரசுகள் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக உழைக்கின்றன. சில கட்சிகள் தங்களது நலன் மற்றும் தங்களது குடும்ப உறுப்பினர்களின் நலனை மட்டுமே யோசிக்கின்றனர். ஆனால், பாஜக அரசோ நாட்டின் நலனையும், நாட்டு மக்களின் நலனையும் குறித்து சிந்திக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். குடும்பக் கட்சிகள் அவர்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் மட்டுமே உழைக்கின்றனர். நாங்கள் நாட்டிற்காக உழைக்கிறோம். அவர்கள் அவர்களுக்காக உழைக்கிறார்கள். ஊழலுக்கு எதிராக போராடுவதாகக் கூறுபவர்கள் கூட தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி ஊழலுக்கு எதிராக போராடுவார்கள்.” என்றார்.

 பாரதத்தை இணைப்போம் என்ற பெயரில் அடுத்த வாரத்தில் காங்கிரஸ் சார்பில் பாரத் ஜோடோ பாத யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொள்ளப்பட உள்ளது. 3,750 கிலோ மீட்டர் கொண்ட இந்த யாத்திரை 150 நாட்களில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com