புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நிர்மலா சீதாராமனின் காரை வழிமறித்த காங்கிரஸார்! தெலங்கானாவில் பரபரப்பு

தெலங்கானா மாநிலம் காமரெட்டியில் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 9:05 am

DIN

தெலங்கானா மாநிலம் காமரெட்டியில் நிர்மலா சீதாராமனின் காரை காங்கிரஸ் கட்சியினர் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(வெள்ளிக்கிழமை) காலை தனது ஸகீராபாத் தொகுதிக்கு உள்பட்ட தெலங்கானா மாநிலம் காமரெட்டி பகுதிக்கு ஆய்வுக்காக சென்றுள்ளார். 

அப்போது அங்கு திடீரென காங்கிரஸ் கட்சியினர் வந்து அமைச்சரின் காரை வழிமறித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

மேலும் அங்கிருந்த பாஜகவினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாஜகவினர் நிர்மலா சீதாராமன் காருக்கு முன்பாக நின்று அவருக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசார் வந்து அவர்களை கலைத்து அமைச்சர் செல்லும் பாதையை ஒழுங்குபடுத்தினர். 

அமைச்சரின் காரை காங்கிரஸார் வழிமறித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.