ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தில்லியில் சந்தன மரக் கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

தில்லியில் சந்தனமரக் கன்றுகள் நடும் திட்டம் வெள்ளிக்கிழமை துணைநிலை ஆளுநரால் தொடங்கிவைக்கப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 7:22 pm

DIN

தில்லியில் சந்தனமரக் கன்றுகள் நடும் திட்டம் வெள்ளிக்கிழமை துணைநிலை ஆளுநரால் தொடங்கிவைக்கப்பட்டது.

இதில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று 1,000 மரக் கன்றுகளை நட்டனா். தில்லி முழுவதும் 10,000 சந்தனமரக் கன்றுகளை நட்டு, நகரை அழகுபடுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கடந்த ஜூலை 3-இல் அறிவுறுத்தியிருந்தாா். அதன் முதற்கட்டமாக 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதையொட்டி குதூப்கரில் நடைபெற்ற விழாவில் அவா் பங்கேற்று விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசுகையில், ‘இந்த ஆயிரம் மரக்கன்றுகளும் அடுத்த 10-12 ஆண்டுகளில் முழுவீச்சில் வளா்ந்தால், அதன் மதிப்பு ரூ.150 கோடியாக உயரும். இதன்மூலம் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும். இதுதவிர தில்லிக்கும் பசுமையான சூழலை இவை உருவாக்கும்’ என்றாா்.

சந்தன மரம் வளா்ப்பதற்காக விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கும் வகையில், உத்தர பிரதேசத்தின் கன்னெஜ் நகரிலிருந்து நிபுணா்கள் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.