பொய்யாக பாஜக பகிர்ந்த விடியோ.. பழனிவேல் தியாகராஜன் கிண்டல்

21ஆம் நூற்றாண்டின் கோயபெல்ஸ் என்று கூறி சில புள்ளிகளை வைத்துவிட்டு, அவ்வளவு புத்திசாலித்தனமும் இல்லையே" என்று கிண்டலடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
பழனிவேல் தியாகராஜன் கிண்டல்
பழனிவேல் தியாகராஜன் கிண்டல்
Published on
Updated on
1 min read

பொய்யாக பாஜக பகிர்ந்த விடியோவை டேக் செய்து, "எனவே, 21ஆம் நூற்றாண்டின் கோயபெல்ஸ் என்று கூறி சில புள்ளிகளை வைத்துவிட்டு, அவ்வளவு புத்திசாலித்தனமும் இல்லையே" என்று கிண்டலடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

இப்படி நிதியமைச்சர் பகிரங்கமாக கிண்டலடிக்கக் காரணம் பாஜகவின் தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவர் அமித் மால்வியா பகிர்ந்த மிகப் பழமையான விடியோதான்.

கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டபோது ஏராளமான கூட்டம் கூடியிருந்தது. இந்த விடியோவை அப்போது அமித் மால்வியா தனது டிவிட்டரில் பகிர்ந்து லைக்குகளையும் பெற்றிருந்தார்.

ஆனால், அவரது போதாத காலமோ என்னவோ, அதே விடியோவை 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி மங்களூருவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற போது எடுத்த விடியோ என்று கூறி அதே டிவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்து விட்டார்.

இதனைக் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல், அல்ட்நியூஸ் என்ற உண்மை கண்டறியும் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு டிவிட்டர் பதிவுகளையும் இணைத்து வெளிச்சம்போட்டு காட்டிவிட்டார்.

அதில், கொல்கத்தாவில் எடுத்த பழைய விடியோ ஒன்றை, மங்களூருவில் எடுத்த விடியோ என்று அமித் மால்வியா பகிர்ந்துள்ளார். இதில் மிகவும் ஆச்சரியமான தகவல் என்னவென்றால், இவர், இதே விடியோவை, கடந்த 2019ஆம் ஆண்டும் பகிர்ந்திருக்கிறார் என்பதுதான் என்று தெரிவித்திருந்தார்.

மொஹம்மது ஜூபைரின் பதிவைப் பார்த்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சும்மா இருப்பாரா? ஜூபைரின் டிவிட்டர் பதிவை ரீடிவீட் செய்து, "எனவே 21-ஆம் நூற்றாண்டின் உண்மையான கோயபெல்ஸ்... என்ன அவ்வளவு புத்திசாலித்தனமும் இல்லை" என்று கூறியிருப்பதோடு,

"இதுபோன்ற தகவல்களிலிருக்கும் அடிப்படை பிழைகளை சரிபார்க்க எந்த தளமும், அமைப்பும் இல்லையா?" என்று கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com