உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா!

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடானது இந்தியா!

பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் -  ஜூன் முதல் காலாண்டின்  மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜிடிபி) கடந்த 2021-22 நிதியாண்டின் கடைசி 3 காலாண்டுகளில் பதிவான விகிதத்தைக் காட்டிலும், 13.5 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ப்ளூம்பெர்க் இண்டெக்ஸ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் கடந்த நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே (ஜனவரி - மார்ச் 2022) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பிரிட்டனின் ஜிடிபியைத் தாண்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளது. அந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இங்கிலாந்தின் 813 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில் 864 பில்லியன் டாலராக இருந்தது.

மேலும் , ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பிரிட்டனின் ஜிடிபி 763 பில்லியன் டாலர்கள். ஆனால்,  அதே காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 823 பில்லியன் டாலராக(ரூ.64.95 லட்சம் கோடி) அதிகரித்திருப்பதால் பொருளாதார வலிமைமிக்க நாடுகள் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்திலிருந்த இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பொருளாதாரத்தில் வலிமை கொண்ட நாடுகளாக அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பட்டியலில் 11-வது இடத்திலிருந்த இந்தியா முதல்முறையாக 5-வது இடத்தை பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com