கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தின் பாலுசேரி தொகுதியின் இளம் எம்.எல்.ஏ. சச்சின் தேவ்(28). இவர், இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவராகவும் சச்சின் தேவ் உள்ளார். இதேபோன்று, தனது 21 ஆவது வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்றவர் ஆர்யா ராஜேந்திரன். இதனால், ஆர்யா ராஜேந்திரன் 2020 இல் நாட்டின் முதல் இளைய மேயராக ஆன பிறகு உலகளாவிய புகழ் பெற்றார். இவர்கள் இருவரும் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பாலசங்கோம் என்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தைகளுக்கான அமைப்பிலும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர்.