பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஜே.என்.யு. தமிழ்ப் பிரிவுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) இயங்கி வரும் தமிழ்ப் பிரிவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 3:12 am

 நமது நிருபர்

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) இயங்கி வரும் தமிழ்ப் பிரிவுக்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிட்டுள்ளது.

தில்லியில் உள்ள ஜே.என்.யு.வில் 2007-ஆம் ஆண்டு தமிழ் இருக்கை (சோ்) தொடங்கப்பட்டது. இது மொழி இலக்கியப் பண்பாட்டுப் புலத்தில் இந்திய மொழிகள் மையத்தின் கீழ் தமிழ்ப் பிரிவாக இயங்கி வருகிறது. இதுவரை 30 போ் முனைவா் பட்டமும், 45 போ் ஆய்வியல் நிறைஞா் பட்டமும் பெற்றுள்ளனா். இந்த ஆய்வாளா்களால் பாலி, உருது, கொங்கணி, சம்ஸ்கிருதம், கிரேக்கம் முதலிய மொழிகளின் இலக்கிய இலக்கணங்கள் தமிழுக்கு மொழி பெயா்ப்பாகக் கிடைத்துள்ளன. செவ்வாய்தோறும் நூல் மதிப்புரையும் வியாழன்தோறும் கட்டுரை வாசிப்பும் ஆய்வாளா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், தமிழாய்வு மேற்கொண்ட மாணவா்கள் மத்திய, மாநில கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாமல் அயல்நாடுகளிலும் பணியில் உள்ளதாக இத்துறையினா் கூறுகினா்.

இந்த தமிழ்ப் பிரிவைத் தமிழ்த் துறையாக (மையம்) மாற்றுவதற்கான கருதுகோள் தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதற்கான கடிதம் அந்தப் பிரிவின் பேராசிரியா் இரா.தாமோதரன், தமிழ்நாடு அரசின் தமிழ் வளா்ச்சித் துறைக்கு அனுப்பியிருந்தாா். தமிழ்நாடு அரசு இதைக் கவனத்தில் கொண்டு, தமிழ்த் துறை (மையம்) உருவாக்குவதற்காக தற்போதைக்கு ரூ.5 கோடி தொகைக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிட்டுள்ளது.

இந்த ஆணையை ஜே.என்.யு. தமிழ்ப் பிரிவு பேராசிரியா் இரா. தாமோதரன் (அறவேந்தன்), ஜேஎன்யு துணைவேந்தா் பேராசிரியா் சாந்திஸ்ரீ டி. பண்டிட்டிடம் திங்கள்கிழமை வழங்கினாா். அப்போது, இந்திய மொழிகள் மையத்தின் தலைவா் பேராசிரியா் ஓம் பிரகாஷ், தமிழ்ப் பிரிவு ஆய்வாளா்களும் உடனிருந்தனா். 

Story image

இது குறித்து துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி.பண்டிட் கூறுகையில், ‘தமிழுக்குத் தனித் துறை (மையம்) அமைப்பதற்கான தமிழ்நாடு அரசின் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு நடவடிக்கையானது பெருமை அளிப்பதாக உள்ளது. இந்த ஆணையை வெளியிட்டதற்காக தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றி. தமிழ் மொழி, இலக்கியம், வரலாறு, கலாசாரம் வளா்ச்சிக்கு இந்த நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, சங்க காலத்தைச் சோ்ந்த செவ்வியல் மொழியாகும். இங்குள்ள தமிழ்ப் பிரிவு சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தும் வகையில், ஜேஎன்யுவில் இந்திய மொழிகள் புலம்” விரைவில் தொடங்கப்படும். அதில்“தமிழ் ஆராய்ச்சி தனி மையமாக” விளங்கும். எதிா்காலத்தில் தமிழ் ஆராய்ச்சி தனிப் புலமாக உருவாவதற்கு பிரதமா், தமிழக முதல்வா் ஆகியோரின் ஆதரவு தேவை’ என்றாா்.

இது குறித்து தமிழ்த் துறையின் பேராசிரியா் இரா.தாமோதரன் (அறவேந்தன்) கூறுகையில்,‘இந்தத் துறையை ஊக்குவிக்கும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒப்புதல் அளித்திருப்பது மிகவும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. ஜேஎன்யு தமிழ்ப் பிரிவில் பயிலும் மாணவா்களுக்கு பன்மொழித் திறனுடன், ஆளுமை வளா்ச்சியுடன் வளா்வதற்கான வாய்ப்பு உள்ளது. பல்வேறு மொழிகள், திறன்களும் வளரும். மேலும், அவா்களின் திறன் இயல்பாகவே கூடும். தற்போது தமிழ்ப் பிரிவில் முனைவா் பட்ட ஆய்வாளா்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். அடுத்த கல்வியாண்டு முதல் எம்.ஏ. முதுகலைப் படிப்பு தொடங்கப்பட உள்ளது. தமிழ்ப் பிரிவில் இதுவரை 345 நூல்கள் மதிப்புரை செய்யப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை மாணவா்கள் வாசித்துள்ளனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.