உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞராக ராம் சங்கர் ராஜா நியமனம்
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞராக ஆஜராக ராஜபாளையத்தை சேர்ந்த ராம் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்குரைஞா் ராம் சங்கா் ராஜா.

வழக்குரைஞா் ராம் சங்கா் ராஜா.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் வழக்குரைஞராக ஆஜராக ராஜபாளையத்தை சேர்ந்த ராம் சங்கர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அரசின் சட்டம், நீதித் துறை மற்றும் சட்ட விவகாரங்கள் துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்குரைஞராக ராம் சங்கர் ராஜாவை நியமித்து செவ்வாய்க்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் அவரது பதவிக் காலம் 3 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த ராம் சங்கர் ராஜா, உச்சநீதிமன்றத்தில் 2012- ஆம் ஆண்டு முதல் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் தில்லி தமிழ் வழக்குரைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பார் கவுன்சிலின் சிறப்பு வழக்குரை
ஞராகவும் உள்ளார். டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வழக்குரைஞராகவும் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் குற்றவியல் துறையில் முதுநிலைப் பட்டமும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் "கொலிஜியம்" என சொல்லப்படும் அமைப்பு குறித்த ஆய்வில் டாக்டர் பட்டமும் பெற்றவர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தில்லி முதன்மை அமர்வில் அரசின் சார்பில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதிட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சிறப்பு வழக்குரைஞராக முக்கிய வழக்குகளில் வாதாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...