பாஜக அரசு கோடிக் கணக்கில் ஊழல் செய்வதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
பாஜக ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதில் கோடிக் கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.


பாஜக ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதில் கோடிக் கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ஆம் ஆத்மி சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இதனை தெரிவித்தார். கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அவர், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானுக்கு கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில் அவருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: ஆன்லைன் ரம்மி: தமிழக அரசின் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
இது குறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது: “ இது மிகப் பெரிய ஊழல். இந்த ஊழலில் கோடிக் கணக்கில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது. நாங்கள் இது குறித்து புகார் அளிக்க உள்ளோம். மேலும், இதனை சிபிஐ விசாரிக்கவும் வேண்டுகோள் வைக்க உள்ளோம். 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு சத்தான உணவு அளிப்பதற்கான திட்டத்தின் கீழ் மாநில அரசால் 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. உணவுப் பொருள்கள் கொண்டு செல்வதற்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்கள் இரு சக்கர வாகனங்கள், கார்களின் எண்களாக இருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், சிபிஐ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத் துறையினர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும் துறை மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு சிபிஐ விசாரணை மேற்கொள்ள வழி செய்ய வேண்டும்.” என்றார்.
இருப்பினும், ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளரின் இந்த குற்றச்சாட்டை மத்தியப் பிரதேச அரசு மறுத்துள்ளது. கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை இறுதியானது இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...