பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தில்லியில் இருசக்கர வாகனத்தை தேசியக் கொடியால் சுத்தம் செய்தவர் கைது

இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:16 am

DIN

புது தில்லி: இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


இரு சக்கர வாகனத்தை சுத்தம் செய்ய தேசியக் கொடியைப் பயன்படுத்தியதாக 52 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  இந்த சம்பவத்தின் விடியோவை உள்ளூர்வாசிகள் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியதை அடுத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.


பஜன்புரா காவல்நிலையத்தில் 1971 தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்புச் சட்டம் பிரிவு 2 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

அந்த நபர் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும், தவறுதலாக செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.