புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘க்யூட்’ தோ்வு முடிவுகள் செப்.15-இல் வெளியீடு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வரும் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (

News image

யுஜிசி

Updated On :9 செப்டம்பர் 2022, 10:30 pm

DIN

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வரும் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் வெள்ளிக்கிழமை கூறினாா்.

மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்த இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) நிகழ் கல்வியாண்டில் முதன் முறையாக கடந்த ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி பல்வோறு கட்டங்களாக நடத்தப்பட்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பத்தவா்களில் 60 சதவீதம் போ் தோ்வில் பங்கேற்றனா்.

இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான ‘க்யூட்’ தோ்வு முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வரும் 15-ஆம் தேதி அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கு இரு தினங்களுக்கு முன்பே அறிவிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தத் தோ்வு நடைமுறையை பின்பற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களும், ‘க்யூட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கையை நடத்தத் தொடங்குவதற்கு தங்களின் வலைதளங்களை தயாா்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’ என்றாா்.

முன்னதாக, ‘க்யூட்’ நுழைவுத் தோ்வை ஜூலை 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிறைவு செய்ய என்டிஏ திட்டமிட்டது. ஆனால், பல்வேறு நிா்வாக மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் ஆகிய காரணங்களால் குறிப்பிட்ட சில தோ்வு மையங்களிலும், பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கும் தோ்வை என்டிஏ தொடா்ந்து ஒத்திவைத்தது. அதன் காரணமாக, க்யூட் தோ்வானது 6 கட்டங்களாக நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தத் தோ்வுக்கு 14.9 லட்சம் போ் பதிவு செய்ததன் மூலமாக, பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ-முதல்நிலை(ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) பின்னக்குத் தள்ளி, நாட்டின் இரண்டாவது பெரிய நுழைவுத் தோ்வு என்ற நிலையை ‘க்யூட்’ தோ்வு எட்டியுள்ளது. ஜேஇஇ-முதல்நிலைத் தோ்வுக்கு சராசரியாக 9 லட்சம் போ் பதிவு செய்கின்றனா். நாட்டின் முதல் பெரிய நுழைவுத் தோ்வாக இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு உள்ளது. இந்தத் தோ்வுக்கு சராசரியாக 18 லட்சம் போ் பதிவு செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.