அசாமில் இருவேறு இடங்களில் 1,100 மற்றும் 860 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அசாம்-திரிபுரா எல்லையில் உள்ள கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு குவஹாத்தியை நோக்கி வந்த லாரியை மடக்கி காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் லாரியின் ரகசிய அறையில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணீஷ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க- தாய் மொழியில் கல்வி கற்பது சிறந்தது: ஆளுநர் ஆர்.என்.ரவி
இதுகுறித்து சுரைபாரி காவல் நிலையத்தின் காவல் அதிகாரி நிரஞ்சன் தாஸ் கூறுகையில், அகர்தலாவில் இருந்து திரிபுரா நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது, சுரைபாரி என்ற இடத்தில் லாரியை மறித்தோம். சோதனையின் போது, லாரியின் ரகசிய அறையில் இருந்து 1108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளோம். லாரியின் ஓட்டுநரையும் கைது செய்துள்ளோம் என்றார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதேபோல் அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் இன்று அதிகாலை காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் இணைந்து நடத்திய சோதனையில் லாரி ஒன்றில் இருந்து 860 கிலோ கஞ்சா மற்றும் 40.70 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி அடுத்த பெரிய முதலியார்சாவடியில் திடீர் கடல் சீற்றம்: இடிந்து விழும் நிலையில் தங்கும் விடுதி

வார பலன்கள் (ஜூலை 17 - 23) 12 ராசிகளுக்கும்! மழலை பாக்கியம் யாருக்கு?
தொடர்ந்து 20 நாள்கள் உண்ணாவிரதம்! ஜூலை 20 வரை என் உயிருக்கு எதுவும் ஆகாது: வாங்சுக்

பழவேற்காடு மீனவா்கள் நாளை(ஜூலை 18) கடலில் மீன் பிடிக்க தடை
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



