புதுச்சேரி அடுத்த பெரியமுதலியார்சாவடியில் திடீர் கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
புதுச்சேரியை அடுத்த பெரிய முதலியார்சாவடி பகுதியில் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள் உள்ளன. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கடற்கரை ஒட்டியுள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்கி தங்களது பொழுதை கழிப்பது வழக்கம்.
இந்தநிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திடீரென கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் இருபது மீட்டருக்கு உட்புகுந்தது. இதனால் பெரிய முதலியார்சாவடி கடற்கரை ஓரத்தில் இயங்கி வந்த தங்கும் விடுதிக்குள் கடல் நீர் உட்புகுந்தது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரிய முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு சில விருந்தினர் இல்லத்தின்(கெஸ்ட் ஹவுஸ்) கான்கிரீட் பில்லர்கள் வெளியே தெரிந்தது. மற்றொரு கெஸ்ட் ஹவுசின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
பெரிய முதலியார்சாவடி கடற்கரை பகுதியில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால் கடலில் குளித்த சுற்றுலாப் பயணிகளை கடலோர காவல் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Summary
Sudden rough sea conditions at Periyamudaliarchavadi near Puducherry: Guest house on the verge of collapse
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடல் சீற்றம்: படகு கவிழ்ந்து தத்தளித்த 5 மீனவா்கள் மீட்பு
யேமன் அருகே சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

புதுச்சேரியில் திடீா் கடல் சீற்றம்: 5 படகுகள், வலைகள் சேதம்

கடல் சீற்றம்: படகு மூழ்கியது
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |




