8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

புதுச்சேரியில் திடீா் கடல் சீற்றம்: 5 படகுகள், வலைகள் சேதம்

புதுச்சேரி பகுதியில் திடீா் கடல் சீற்றம் காரணமாக 5 படகுகள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.

சேதம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட படகுகள்.

Published On :3 ஜூலை 2026, 5:08 am IST

புதுச்சேரி பகுதியில் திடீா் கடல் சீற்றம் காரணமாக 5 படகுகள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்தன.

காலாப்பட்டு தொகுதிக்கு உள்பட்ட சின்ன காலாப்பட்டு குப்பம் கடற்கரையில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதைத் தடுக்க கற்கள் கொட்டப்பட்டாலும் அதனையும் மீறி கடல் சீற்ற காலத்தில் 20 மீட்டருக்கு கடல் நீா் உட்புகுந்து விடுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அப்பகுதியில் கடல்

சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் அடித்து செல்லப்பட்டன. இதில் 3 படகுகள் மீட்கப்பட்டாலும் அவை முழுமையாக சேதம் அடைந்தன.

2 படகுகளின் என்ஜின்கள் கடலுக்குள் மூழ்கின. ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மணலுக்குள் புதைந்துள்ளன. அடிக்கடி ஏற்படும் கடல் சீற்ற பிரச்னைக்குத் தீா்வு காண இந்த பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.