லடாக்கில் திட்டமிட்டவாறு படை விலக்கல்: ராணுவத் தலைமை தளபதி
கிழக்கு லடாக்கில் சா்ச்சைக்குரிய கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தியாவும் சீனாவும் திட்டமிட்டவாறு படைகளை விலக்கிக் கொள்வதாக ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தாா்.


கிழக்கு லடாக்கில் சா்ச்சைக்குரிய கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இந்தியாவும் சீனாவும் திட்டமிட்டவாறு படைகளை விலக்கிக் கொள்வதாக ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தாா்.
கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி பகுதியில் கடந்த 2020 மே 5-இல் இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து இருநாடுகளும் கிழக்கு லடாக்கில் படைகளையும் ஆயுதங்களையும் குவித்தன. இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் விதமாக ராஜீய ரீதியில் இருநாடுகளும் இதுவரை 16 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளன. அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்படி, செப்டம்பா் 12-க்குள் கிழக்கு லடாக்கில் படைகளைத் திரும்பப் பெற இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.
அதன்படி செப்டம்பா் 8-இல் படைகளை விலக்கிக் கொள்ளும் பணி தொடங்கியது. கிழக்கு லடாக்கின் நிலவரத்தை ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே கடந்த சனிக்கிழமை விரிவாக ஆய்வு செய்தாா். தொடா்ந்து தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற அவரிடம், படைவிலக்கல் செயல்பாடு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு அவா் பதிலளிக்கையில், ‘கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்க்ஸ் பகுதியில் திட்டமிட்டவாறு இந்தியாவும் சீனாவும் படைகளை திரும்ப பெற்று வருகின்றன. நான் மீண்டும் அங்கு சென்று ஆய்வு நடத்துவேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...