45 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 45 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 45 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை. கடந்த மாதத்தில் மட்டும் 1,330 மருந்துகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், ஆன்ட்டி பயாட்டிக், வயிற்றுப் போக்கு, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் 45 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அதன் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்ரீக்ள்ஸ்ரீா்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...