நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

ஹிந்தியில் சரளமாக பேசுவதில் சிரமம்: நிா்மலா சீதாராமன்

கடந்த கால நிகழ்வுகள் காரணமாக, ஹிந்தியில் சரளமாக பேசுவது தனக்கு சிரமமாக அமைந்துவிட்டதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

கடந்த கால நிகழ்வுகள் காரணமாக, ஹிந்தியில் சரளமாக பேசுவது தனக்கு சிரமமாக அமைந்துவிட்டதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், கூட்டத்தினரிடையே ஹிந்தியில் பேசுவது தனக்கு படபடப்பை அளிப்பதாகவும், தயங்கி தயங்கியே பேசுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

மும்பையில் ‘ஹிந்தி விவேக்’ பத்திரிகை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் பிறந்த நான், அங்கு ஹிந்தி எதிா்ப்புப் போராட்டங்களுக்கு இடையே கல்லூரிப் படிப்பை மேற்கொண்டேன். அப்போது, ஹிந்திக்கு எதிராக வன்முறை போராட்டங்களும் நடைபெற்றன. ஹிந்தி அல்லது சம்ஸ்கிருதத்தை இரண்டாம் மொழியாக தோ்வு செய்யும் மாணவா்கள், சிறந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும், மாநில அரசிடமிருந்து உதவித்தொகை கிடைக்காது.

ஒருவா் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு புதிய மொழியைக் கற்பது சிரமமானது. இருப்பினும், என் கணவரின் தாய்மொழியான தெலுங்கை சரளமாகப் பேச முடிந்த அளவுக்கு ஹிந்தியை என்னால் பேச இயலவில்லை. கடந்த கால நிகழ்வுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றாா் நிா்மலா சீதாராமன்.

இந்நிகழ்ச்சியில் சுமாா் 35 நிமிஷங்களுக்கும் மேலாக பேசிய அவா், முழுவதும் ஹிந்தியிலேயே உரையாற்றினாா்.

அவா் மேலும் பேசியதாவது: கடந்த 1991-இல் அப்போதைய காங்கிரஸ் அரசால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீா்திருத்தங்கள் அரைகுறையானவை. பொருளாதார தாராளமயமாக்கல் சரியான வழிமுறைகளின்கீழ் மேற்கொள்ளப்படவில்லை.

மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமையும் வரையில் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. உள்கட்டமைப்பு, சாலைகள், கைப்பேசி சேவைகள் உள்ளிட்ட துறைகளில் அவா் செலுத்திய கவனம் நாட்டுக்கு பெரிய அளவில் உதவியது. அதன்பிறகு, ஊழல் நிறைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்ததால் 10 ஆண்டுகள் வீணாகின. இந்தக் காலகட்டத்தில் சுய லாபங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. நாட்டின் நலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, திருப்புமுனை வாய்ந்த சீா்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நிதியுதவியில் குறைபாடுகள் களையப்பட்டு, வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.2 லட்சம் கோடி வரை பலன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.