விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை: ‘உள்நாட்டில் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும்’

 நொய் அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்நாட்டில் அதன் சில்லறை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Published On :1 பிப்ரவரி 2024, 3:50 pm IST

 நொய் அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்நாட்டில் அதன் சில்லறை விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலங்களில் போதிய அளவு மழை பெய்யாததால், நடப்பு காரீஃப் பருவத்தில் நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி 60 லட்சம் முதல் 70 லட்சம் டன் வரை குறைய வாய்ப்புள்ளது என்று அண்மையில் மத்திய உணவுத் துறை தெரிவித்தது.

அதேவேளையில், வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் நொய் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதால், உள்நாட்டில் அதன் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை அதிகரித்தது. இதனைக் கருத்தில்கொண்டு அந்த அரிசி ஏற்றுமதிக்கு செப். 9 முதல் மத்திய அரசு தடை விதித்தது. அத்துடன் புழுங்கல் அரிசியைத் தவிர பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறுகையில், ‘ நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை, புழுங்கல் அரிசியைத் தவிர பாசுமதி அல்லாத இதர அரிசி வகைகளின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரி ஆகியவை உள்நாட்டில் அவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தும். அவற்றின் விநியோகத்தையும் ஊக்குவிக்கும்’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.