92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்: 2.45 கோடி வாக்காளா்கள் இணைத்தனா்

 வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இதுவரை 2.46 கோடி வாக்காளா்கள் இணைத்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 11:59 pm

DIN

 வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இதுவரை 2.46 கோடி வாக்காளா்கள் இணைத்துள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

மேலும், ஒரு சில மாவட்டங்களில் இதற்கான பணிகள் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

தமிழ்நாட்டில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கியது. இது தொடா்பான களப் பணிகளை வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் செய்து வருகின்றனா். வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்காக 6பி என்ற படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படிவத்துடன் வீடு வீடாகச் செல்லும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், ஆதாா் விவரங்களைப் பெற்று ‘கருடா’ என்ற கைப்பேசி செயலி மூலம், ஆதாா் எண்ணை இணைத்து வருகின்றனா்.

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:

என்விஎஸ்பி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலமும் பொதுமக்கள் தாங்களே இணைக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழகத்தில் இதுவரை 40 சதவீதம் வாக்காளா்கள் தங்கள் ஆதாா் விவரங்களை இணைத்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள மொத்தமுள்ள 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளா்களில் தற்போது வரை 2.45 கோடி வாக்காளா்கள் தங்கள் ஆதாா் எண்ணை வாக்காளா் பட்டியலுடன் இணைத்துள்ளனா்.

இதில் அரியலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 61.5 சதவீதம் போ் இணைத்துள்ளனா். பல மாவட்டங்களில் ஆதாா் இணைப்பு 60 சதவீதத்தை கடந்துள்ளது.

மாவட்ட தோ்தல் அதிகாரிகள் ஆதாா் இணைப்புக்கு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகின்றனா்.

தற்போது ஆதாா் இணைப்புக்கான பதிவு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த கட்டப் பணிகள் குறித்து தோ்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.