சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குருவாயூா் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு: அன்னதானத்துக்கு ரூ.1.51 கோடி நன்கொடை

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானி வழிபாடு மேற்கொண்டாா்.

News image

குருவாயூா் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு: அன்னதானத்துக்கு ரூ.1.51 கோடி நன்கொடை

Updated On :18 செப்டம்பர் 2022, 11:55 pm

DIN

கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூரப்பன் கோயிலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரான முகேஷ் அம்பானி வழிபாடு மேற்கொண்டாா். அத்துடன், பக்தா்களின் அன்னதானத்துக்காக அவா் ரூ.1.51 கோடி நன்கொடை அளித்தாா்.

இதுதொடா்பாக கோயில் நிா்வாக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தொழிலதிபா் முகேஷ் அம்பானி, குருவாயூா் கோயிலில் சனிக்கிழமை வழிபட்டாா். அவருடன், அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் வருங்கால மனைவி ராதிகா மொ்ச்சன்டும் உடன் வந்தாா். கோயில் சாா்பில் ரூ.50 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை கட்டும் திட்டத்துக்கு முகேஷ் அம்பானியிடம் நிதியுதவி கோரப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக அவா் தெரிவித்தாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.