இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும் கூட்டணியும் சாத்தியம் என்று நம்புவது தவறானது. அது முட்டாள்தனமான நம்பிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :19 செப்டம்பர் 2022, 12:25 am

காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும் கூட்டணியும் சாத்தியம் என்று நம்புவது தவறானது. அது முட்டாள்தனமான நம்பிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தங்கள் சுயநலன்களுக்காக பல மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் முதுகில் குத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

கொல்கத்தாவில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அவர் பிடிஐ செய்தியாளருக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
பாஜக அல்லாத எந்தவொரு கட்சியும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் தொடந்து 5 ஆண்டுகள் ஆட்சியைத் தந்தது உண்டா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.  

திரிணமூல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் காங்கிரஸýக்கு எதிராகக் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் திரிணமூல் காங்கிரஸில் பெயரிலேயே "காங்கிரஸ்' உள்ளது. 

ஆம் ஆத்மி கட்சியோ பாஜகவின் "பி' அணிபோல செயல்படுகிறது. அந்தக் கட்சியின் வரலாற்றை அல்லது அக்கட்சி தலைவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் அதை நீங்கள் அறியலாம். 

காங்கிரûஸ தவிர்த்து எதிர்க்கட்சியை ஒற்றிணைக்க யாராவது முயன்றால் அது பலவீனமான அணியாகவே இருக்கும். பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி இன்றி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும் கூட்டணியும் சாத்தியமில்லை.

கூட்டணியில் நீங்கள் ஒன்றை விட்டுக் கொடுக்கவும், திரும்பப் பெறவும் முன்வர வேண்டும். அதன்படி காங்கிரஸ் இதுவரை பிற கட்சிகளுக்கு சலுகையை வழங்கியிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் இதனால் பலனடைந்துள்ளன. அப்படி பலன்களைப் பெற்ற கட்சிகள்தான் தங்கள் சுயநலன்களுக்காக கடந்த காலங்களில் காங்கிரஸின் முதுகில் குத்தியுள்ளன. அச்செயலை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். 

தற்போது காங்கிரஸ் சார்பில் நடைபெறும் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் காங்கிரஸை வலுப்படுத்தியுள்ளது. தேசிய பிரச்னைகளை முன்வைத்து இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினோம். பாஜகவின் பிளவுபடுத்தும் அரசியலால் நாட்டின் பொருளாதாரம், நிறுவனங்கள், அரசியல் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 

இந்த நடைப்பயணத்தின் மற்றொரு முக்கிய நோக்கம் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரûஸ முன்னெடுத்துச் செல்வதாகும். மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மையப்படுத்தி இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படவில்லை. 
காங்கிரஸ் கட்சி சீர்குலைந்துவிட்ட நிலையில் இந்த நடைப்பயணமா என்று கேட்கிறீர்கள். காங்கிரஸின் உள்கட்சி விவகாரங்களை சரி செய்ய முயன்று வருகிறோம். 137 ஆண்டுகள் பழைமை கொண்டது காங்கிரஸ் கட்சி. 
வரலாற்றில் சில முக்கிய தருணங்கள் நிகழ்ந்துள்ளன. அதுபோன்ற ஒரு தருணம்தான் தற்போது இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம். இது மாற்றத்தை உருவாக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஐந்தரை மாதங்கள் தொடர்ந்து  நடைப்பயணம் மேற்கொள்வதன் நோக்கம் கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைப்பதோடு மட்டுமல்லாமல் அமைப்பை வலுப்படுத்துவதுமாகும். இந்த நடைப்பயணம் கட்சிக்கு புது ஆற்றலைத் தரும். 

ஜி-23 எனும் அதிருப்தி தலைவர்கள் பற்றி கேட்கிறீர்கள், கட்சியில் 65 வயதைக் கடந்த மூத்த தலைவர்கள் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.  

காங்கிரஸிலிருந்து மூத்த தலைவர்கள் வெளியேறுவதில் இரண்டு வகை உள்ளது. ஒரு தரப்பு குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கட்சியிலிருந்து கொண்டு அனைத்து பலன்களையும் பெற்ற பிறகு கட்சியைவிட்டு விலகியுள்ளனர். மற்றொரு தரப்பினர் மத்திய புலனாய்வு முகமைகளின் விசாரணைக்குப் பயந்து கட்சியிலிருந்து விலகியுள்ளனர். காங்கிரஸ் மீது பற்றுள்ளவர்கள் கட்சியைவிட்டு விலகுவதில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.