பாஜகவில் இணைந்த அமரீந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரைச் சந்தித்தார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் இன்று இணைந்தார்.
50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கி, அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.
ஆனால், தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. பஞ்சாப் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாபில் மத்திய பாஜக அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜுஜு, பாஜக தலைவர் சுனில் ஜாஹர், பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வினி ஷர்மா ஆகியோர் முன்னிலையில் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார்.
பாஜகவில் இணைந்த பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோரை அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக அமரீந்தர் சிங், இன்று காலையிலும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | பாஜகவில் இணைந்தார் அமரீந்தர் சிங்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

