பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங் பாஜகவில் இன்று இணைந்தார்.
50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அமரீந்தர் சிங், கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியைத் தொடங்கிய அவர், அண்மையில் நடந்த பஞ்சாப் பேரவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தார்.
ஆனால், தேர்தலில் அவரது கட்சி படுதோல்வி அடைந்தது. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய பாஜக அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜுஜு, பாஜக தலைவர் சுனில் ஜாஹர், பஞ்சாப் பாஜக தலைவர் அஷ்வினி ஷர்மா ஆகியோர் முன்னிலையில் அமரீந்தர் சிங் இன்று பாஜகவில் இணைந்தார். மேலும் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைத்தார்.
முன்னதாக அமரீந்தர் சிங், இன்று காலை தில்லியில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!
இந்தியா கையில் பாகிஸ்தானின் தலையெழுத்து... துரந்தர் - 2 தமிழ் டிரைலர்!

சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர் பங்கேற்பு
ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

