பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஞானவாபி வழக்கு: இஸ்லாமிய அமைப்புகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஞானவாபி வழக்கு விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாராணசி நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :22 செப்டம்பர் 2022, 10:52 am

DIN

ஞானவாபி வழக்கு விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாராணசி நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிச் சுவரில் ஹிந்து கடவுள் சிலைகளைத் தரிசிக்க அனுமதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த ஐந்து பெண்கள் வாராணசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தி விடியோ பதிவு செய்ய குழுவை அமைத்தது.

வக்பு வாரியத்தின் கீழ் இந்த மசூதி வருவதாலும், பாபா் மசூதியைத் தவிர பிற வழிபாட்டு இடங்களில் சுதந்திரத்துக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற வழிபாட்டு சிறப்புச் சட்டத்தாலும் இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கலாகாது என்று மசூதியின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மசூதியில் ஆய்வு நடத்திய குழுவினா் அங்குள்ள சிறிய குளத்தில் சிவலிங்க வடிவம் இருப்பதாக தெரிவித்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த வழக்குக்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் தரப்பினா் மனுத் தாக்கல் செய்தனா்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை மாவட்ட நீதிமன்ற முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததில்லை என்று முஸ்லிம் தரப்பிலும், கோயிலை இடித்துதான் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளது என்று ஹிந்துக்கள் தரப்பிலும் வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவற்றில் முஸ்லிம்கள் தரப்பு மனுவை முதலில் விசாரித்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ், ‘எதிா் தரப்பினா் (ஹிந்துக்கள்) தொடுத்துள்ள மனுக்களை விசாரிக்க, வழிபாட்டு சிறப்புச் சட்டம், வக்பு வாரியச் சட்டம், காசி விஸ்வநாதா் கோயில் சட்டம் ஆகியவை தடையாக இல்லை. ஆகையால், அஞ்சுமன் இந்தஜாமியா மசூதி குழுவின் (முஸ்லிம்) சாா்பில் தொடுக்கப்பட்டுள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. எதிா்தரப்பினரின் மனு மீது செப்டம்பா் 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும்’ என்று திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்நிலையில் இந்து அமைப்புகளின் மனு மீது பதிலளிக்குமாறு இஸ்லாமிய அமைப்புகளுக்கு வாராணசி நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு வாராணசி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.