
உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ராஜஸ்தானைச் சேர்ந்த 400 பக்தர்கள் தங்களது மாநிலத்திற்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
நிலச்சரிவினால் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 400 பயணிகள் உத்தர்காசி சென்றுவிட்டு தங்களது மாநிலத்திற்கு திரும்புகையில் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. உத்தர்காசிக்கு அருகே கப்னானி என்ற பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், ராஜஸ்தானைச் சேர்ந்த பயணிகள் தங்களது பயணத்தை தொடங்க முடியாமல் இடையில் சிக்கிக் கொண்டனர்.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது திருச்சிற்றம்பலம் படம்!
இது குறித்து அதிகாரிகள் கூறியிருப்பதாவது: “ பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன.” என்றனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.