காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :24 செப்டம்பர் 2022, 10:16 am

DIN

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 இடங்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு ரூ.85,705 கோடி என்று  திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்துக்கு பின் தலைவர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

2014-க்கு பின் தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்க கூடாது என முடிவு செய்யப்பட்டதாக சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.


திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருவதையொட்டி, கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதி கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுப்பா ரெட்டி  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.