நாட்டில் இதுவரை 217 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 217.41 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 217 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 217.41 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,000 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கரோனாவுக்கு 44,436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் முதல் தவணையாக 40922085 ஆகவும், இரண்டாவது தவணையாக 31491154 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணையாக 561163460 ஆகவும், இரண்டாவது தவணையாக 515334360 ஆகவும் போடப்பட்டுள்ளது. 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  3,03,888 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 89,33,52,145 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com