பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரணைகள்: நேரடி ஒளிபரப்பு தொடக்கம்

அரசியல் சாசன அமா்வின் விசாரணைகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முதல் நேரடி ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளது.

News image
Updated On :27 செப்டம்பர் 2022, 8:54 pm

DIN

அரசியல் சாசன அமா்வின் விசாரணைகளை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முதல் நேரடி ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வின் நடவடிக்கைகள் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற வலைதளம் மூலம் அந்த ஒளிபரப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அன்றைய தினம் என்.வி.ரமணா ஓய்வு பெறவிருந்ததாா். இதனால், அவரின் தலைமையில் கூடிய அமா்வு சம்பிரதாய நிகழ்வாக இருந்தது.

இந்நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் கலந்துகொண்டனா். அப்போது உச்சநீதிமன்றத்தின் அனைத்து அரசியல் சாசன அமா்வு விசாரணைகளையும் செப்டம்பா் 27 முதல் நேரடி ஒளிபரப்பு செய்ய தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, அரசியல் சாசன அமா்வின் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது செவ்வாய்க்கிழமை தொடங்கியது. webcast.gov.in/scindia/'என்ற இணைப்பு மூலம் நேரடி ஒளிபரப்பை காண முடியும்.

நேரடி ஒளிபரப்புக்கு யூ-டியூப்பை பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, விரைவில் உச்சநீதிமன்றத்தின் சொந்த தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.