ரூ.10,000 கோடி செலவில் 3 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒப்புதல்

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களான தில்லி, அகமதாபாத், மும்பை (சிஎஸ்எம்டி) ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும்
ரூ.10,000 கோடி செலவில் 3 ரயில் நிலையங்களை மேம்படுத்த ஒப்புதல்


பழுதடைந்துள்ள 3 ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக தோராயமாக ரூ.10,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களான தில்லி, அகமதாபாத், மும்பை (சிஎஸ்எம்டி) ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என இந்தியன் ரயில்வே சார்பில் முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது. 

மத்திய அமைச்சரவையில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, ரயில்வேத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தில்லி, அகமதாபாத், மும்பை ஆகிய ரயில் நிலையங்களை மேம்படுத்த தோராயமாக ரூ.10,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com