வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மம்தா டிசம்பரில் கைது? பாஜக தலைவர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்று மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியுள்ளார்.

News image
மம்தா டிசம்பரில் கைது? பாஜக தலைவர்
Updated On :28 செப்டம்பர் 2022, 12:48 pm

DIN

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்று மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல, மேற்கு வங்க மாநில அரசு பற்றி பல்வேறு ஆரூடங்களையும் அவர் சரமாரியாக வெளியிட்டு சொந்தக் கட்சியினரே கலங்கும் வகையில் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி வரும் டிசம்பர் மாதத்தில் கைது செய்யப்படலாம். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு தற்போது 41 தலைவர்களின் பெயர்கள் அடிபடுகிறது. வரும் டிசம்பரில் மேற்கு வங்கத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று மஜும்தார் குறிப்பிட்டுள்ளார்.

இவருடன், நடிகரும் பாஜக தலைவருமான மிதுன் சக்ரவர்த்தி பேசுகையில், மம்தா பானர்ஜி கட்சியைச் சேர்ந்த 21 எம்எம்ஏக்களுடன் நான் பேசி வருகிறேன். நான் ஏற்கனவே கூட இதனைக் கூறியிருக்கிறேன், தற்போதும் சொல்கிறேன், சிறிது காலம் காத்திருங்கள் உரிய நேரும் வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.