தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பிஎஃப்ஐ போராட்டத்தில் சேதம்: ரூ. 5.20 கோடி அபராதம் விதித்தது நீதிமன்றம்

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கடந்த வாரம் கேரளத்தில் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 5.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 செப்டம்பர் 2022, 10:47 am

DIN

தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கடந்த வாரம் கேரளத்தில் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட சேதத்திற்கு ரூ. 5.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட இயங்களுக்கு ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பினர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு 350 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து, பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிப்பதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதற்கிடையே, பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிரான சோதனையை கண்டித்து கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி ஒருநாள் முழு அடைப்புப் போராட்டம் கேரளத்தில் நடத்தப்பட்டது.

அப்போது, 71 அரசுப் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டதாகவும், 11 ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், இரண்டு வாரத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பும், அதன் பொதுச் செயலாளர் அப்துல் சத்தாரும் மொத்தம் ரூ. 5.20 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.