பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் தேசிய விசாரணை முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
பல்வேறு இடங்களில் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டனர்.
இந்த சோதனைகளில் முடிவில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமான பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு பிஎஃப்ஐ அமைப்பை 5 ஆண்டுகள் தடை செய்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக நேற்று கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் பிஎஃப்ஐ அமைப்பை முழுமையாக கலைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு கேரள காவல்துறையினர் அடுத்தக்கட்ட விசாரணைக்காக அப்துல் சத்தாரை தேசிய விசாரணை முகமை(என்ஐஏ)-யிடம் ஒப்படைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் சசி தரூரின் பாதுகாவலர், ஓட்டுநர் மீது தாக்குதல்! ஒருவர் கைது!
தேனி டூ வாஷிங்டன்! அமெரிக்க தலைநகரின் மேயர் போட்டியில் தமிழ்ப் பெண்!

சிஎஸ்கேவை வீழ்த்திய பிறகு தனுஷ் படக்காட்சியைப் பகிர்ந்த பஞ்சாப்!

'அரசியல் சாசன மோசடி' தேர்தல் நெருக்கடியில் நாடாளுமன்றக் கூட்டம்: ப. சிதம்பரம் கண்டனம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


