ஜம்மு-காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 99 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு இதுவரை 87 மக்களும், 99 ராணுவ வீரர்களும் தீவிரவாத தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் இதுவரை 87 மக்களும், 99 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் முந்தைய 5 ஆண்டுகளைக் காட்டிலும் தீவிரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2018ஆம் ஆண்டு 417 தீவிரவாதத் தாக்குல்களும், 2019ஆம் ஆண்டு 255 தாக்குதல்களும், 2020ஆம் ஆண்டு  244 தாக்குதல்களும், 2021ஆம் ஆண்டு 229 தாக்குதல்களும் நடந்துள்ளன.

2014 மே மாதம் முதல் 2019 ஆகஸ்ட் மாதம் வரை தீவிரவாதத் தாக்குதல்களால் 177 மக்களும், 406 ராணுவ, பாதுகாப்புப் படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 
மற்றொருமொரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய், ஜம்மு-காஷ்மீரில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இதுவரை 51 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு விருப்ப மனுக்கள் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com