மீண்டும் கரோனா: மும்பையில் உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதிப்பு 

நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் கரோனா: மும்பையில் உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதிப்பு 
மீண்டும் கரோனா: மும்பையில் உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதிப்பு 


மும்பை: நாட்டில், முதல் முறையாக அதிவேகமாகப் பரவக் கூடிய உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ வைரஸ் ஒருவருக்கு பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் 376 பேரின் கரோனா மாதிரிகளை ஒமைக்ரான் தீநுண்மியின் மரபணு வரிசைமுறை பரிசோதனை நடத்தியதில், ஒருவருக்கு உருமாறிய ஒமைக்ரான்-எக்ஸ்இ தொற்றும், மற்றொருவருக்கு உருமாறிய கப்பா வைரஸ் தொற்றும் பாதித்திருப்பது தெரிய வந்திருப்பதாக மும்பை மாநகராட்சியின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ பாதித்த நோயாளியின் உடல்நலம் சீராக இருப்பதாகவும், மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் பரவும் திறன் கொண்ட ஒமைக்ரான் வைரஸைக் காட்டிலும் இந்த புதிய வகை ஒமைக்ரான்-எக்ஸ்இ வகை 10 மடங்கு கூடுதலாக பரவும் அபாயம் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒமைக்ரான் பிஏ.2 வைரஸ் தொற்றின் பல மடங்கு உருமாறிய வைரஸாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 9.8 சதவீதமாக இருப்பதாகவும், இது பரிசோதனைகளிலிருந்து தப்பிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதகாவும் கூறப்படுகிறது.

உலகில் ஏற்கனவே பரவிய கரோனா வைரஸ்களைக் காட்டிலும், தற்போது பரவி வரும் இந்த உருமாறிய ஒமைக்ரான் - எக்ஸ்இ அதிகம் பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com