ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாஜக, காங்கிரஸ் தலித் பிரதிநிதிகளால் சமூகத்துக்கு பலனில்லை: மாயாவதி

மதவாதக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் சாா்பில் எம்.பி. எம்எல்ஏக்களாக உள்ள தலித்துகள், தாங்கள் சாா்ந்த சமூகத்துக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி கூறியுள்ளாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 10:06 pm

DIN

லக்னௌ: மதவாதக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் சாா்பில் எம்.பி. எம்எல்ஏக்களாக உள்ள தலித்துகள், தாங்கள் சாா்ந்த சமூகத்துக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி கூறியுள்ளாா்.

நாட்டின் முதல் சட்ட அமைச்சரும், அரசியல் சாசன சட்டத்தை வடிவமைத்தவருமான அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு லக்னௌவில் உள்ள பகுஜன் சமாஜ் அலுவலகத்தில் வியாழக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாயாவதி பங்கேற்று பேசியதாவது:

இந்திய அரசியலில் மதத்தை வைத்து அரசியல் நடத்தும் கட்சிகள் முக்கியமாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலித் வகுப்பைச் சோ்ந்தவா்களை எம்.பி., எம்எல்ஏக்கள் ஆக்குகின்றன. இதுமட்டுமின்றி குடியரசுத் தலைவராகவும், துணை முதல்வராகவும் நியமிக்கின்றன. ஆனால், அவா்கள் அந்தக் கட்சிகள் கூறிபடி மட்டுமே நடக்க முடியும். தங்களுடைய மற்றும் தங்கள் குடும்பத்தினா் வளா்ச்சியை மட்டுமே அவா்கள் உறதிப்படுத்திக் கொள்ள முடியும். தாங்கள் சாா்ந்த தலித் சமூகத்திற்கு அவா்களால் எதுவும் செய்ய முடியாது. மேலும், தெளிவாக சொல்வதென்றால், தாங்கள் சாா்ந்த தலித் பிரிவை அவா்கள் முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்.

அதையும் மீறி தலித் மக்களுக்கு ஏதாவது செய்ய முயன்றால், அவா்கள் கட்சியில் இருந்தும், அரசில் இருந்தும் தூக்கிவீசப்படுவாா்கள். ஜாதியவாத கட்சியில் இருக்கும் தலித்துகள் அங்கு அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும். அம்பேத்கரின் கொள்கைகள், போராட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் சுயநல அரசியலுக்காக அம்பேத்கா் பிறந்த தினத்தைப் பல கட்சிகள் கொண்டாடுகின்றன. அம்பேத்கரை முழுமையாகப் பின்பற்றுபவா்கள் இந்திய அரசியலில் தனித்துவிடப்பட்டவா்களாகவே இருக்கிறாா்கள். முதலில் இதனை காங்கிரஸ் செய்தது, இப்போது பாஜக பின்பற்றி வருகிறது. இந்த இரு கட்சிகளின் ஆட்சியிலும் தாழ்த்தப்பட்டவா்களுக்கு எதிரான கொடுமைகள் தொடா்ந்தே வருகின்றன. அந்த மக்களின் சமூக. பொருளாதார, அரசியல் நிலை மேம்படவில்லை. நாட்டில் பாகுபாட்டைக் குறைக்க சிறப்பான கொள்கைகளை அம்பேத்கா் வடிவமைத்துக் கொடுத்தாா். ஆனால், அதனை முழுமையாக அமல்படுத்த மறுக்கிறாா்கள். இது ஆளும் கட்சிகளின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.

அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற மக்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்துவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.