பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பிரதமா் நரேந்திர மோடி (கோப்புப்படம்)

‘பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிக்கிறது’: 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

வெறுப்பு கருத்துகள் குறித்த விவகாரத்தில் பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிப்பதாக 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Published on

வெறுப்பு கருத்துகள் குறித்த விவகாரத்தில் பிரதமரின் அமைதி அதிர்ச்சியளிப்பதாக 13 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் வகுப்புவாத செயல்களுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் உணவு, உடை, மொழி, பண்டிகைகள், நம்பிக்கை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மக்கள் ஒற்றுமை துண்டாடப்படுவதாகவும் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் அமைதி அதிர்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டு மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும், பிரிவினை சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடவும் உறுதியேற்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com