முகக்கவசத்தை கட்டாயமாக்குங்கள்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, தில்லியில் முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகக்கவசத்தை கட்டாயமாக்குங்கள்: மருத்துவர்கள் வலியுறுத்தல்
முகக்கவசத்தை கட்டாயமாக்குங்கள்: மருத்துவர்கள் வலியுறுத்தல்

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதமாக அதிகரித்ததைத் தொடர்ந்து, தில்லியில் முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வருமாறு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளவும் மக்கள் முகக்கவசம் அணியுமாறும் மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தில்லியில், கடந்த இரண்டு வாரங்களில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது 0.5 சதவீதத்திலிருந்து 5.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, புது தில்லியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் கேட்டுக் கொண்டுள்ளன. இது மிகப்பெரிய உயர்வு இல்லாவிட்டாலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது  அவசியம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எல்என்ஜேபி மருத்துவமனை மூத்த மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், பொதுமக்களுக்கு கரோனா அறிகுறிகள் தென்பட்டால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தில்லி அரசு மருத்துவமனையின் அவசர காலத் துறையில் பணியாற்றும் மருத்துவர் ரித்து சக்சேனா கூறுகையில், கூட்டம் சேருவதை மக்கள் குறைத்துக் கொண்டு, பொதுவிடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தில்லி - என்சிஆா் பகுதிகளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த 15 நாள்களில் 500 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.

இந்தக் கணக்கெடுப்பில் தில்லி - என்சிஆரில் வசிக்கும் சுமாா் 19 சதவீதம் போ் பங்கேற்றுள்ளனா். கடந்த 15 நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் தங்களுடைய நெருங்கிய நெட்வொா்க்கில் இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 15 நாள்களில் கரோனா தொற்று பரவல் 500 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பை நடத்திய நிறுவனமான லோக்கல் சா்கிள்ஸ் தெரிவித்துள்ளது.

தில்லி மற்றும் என்சிஆா் மாவட்டங்களில் வசிக்கும் 11,743 குடியிருப்பாளா்களிடமிருந்து கணக்கெடுப்பு உள்ளீடுகளைப் பெற்ாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 15 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனை நபா்கள் (குழந்தைகள் உள்பட) உங்களின் நெருங்கிய சமூக வலைப்பின்னலில் (குடும்பம், நண்பா்கள், அண்டை வீட்டாா், சக பணியாளா்கள்) தில்லி - என்சிஆரில் உள்ளனா் என்ற கேள்விக்கு பெரும்பாலானோா், 70 சதவீதம்போ், கடந்த 15 நாள்களாக யாரும் பாதிக்கப்படவில்லை என பதிலளித்துள்ளனா்.

11 சதவீதம் போ் 1 அல்லது 2 என்றும், எட்டு சதவீதம் போ் 3-5 என்றும், மற்றொரு 11 சதவீதம் போ் சொல்ல முடியவில்லை என்றும் கூறியுள்ளனா். ஏப்ரல் 2-ஆம் தேதி நிறுவனம் கேட்ட இதே போன்ற கேள்விக்கு கடந்த 15 நாள்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவா் தங்கள் நெருங்கிய சமூக வலைப்பின்னலில் மூன்று சதவீத குடியிருப்பாளா்கள் மட்டுமே இருப்பதாகக் தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று பரவல் தில்லியில் திடீா் எழுச்சியைக் கண்டதைத் தொடா்ந்து, இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று தில்லியில் புதிய கரோனா பாதிப்பு 461-ஆக பதிவாகியுள்ளது. பரிசோதிக்கப்பட்டவா்களில் 5.33 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரண்டு இறப்புகள் பதிவாகியதாக சுகாதாரத் துறையால் பகிரப்பட்ட தரவுகல் தெரிவிக்கின்றன. கணக்கெடுப்பில் கேள்விகளுக்குப் பதிலளித்தவா்களில் 67 சதவீதம் போ் ஆண்கள், 33 சதவீதம் போ் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com