4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது

குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :25 ஏப்ரல் 2022, 3:11 pm

DIN

குஜராத் மாநில எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி அஸ்ஸாம் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘பிரதமா் நரேந்திர மோடி, கோட்சேவை கடவுளாகக் கருதக் கூடியவா்’ என்று ட்விட்டரில் பதிவிட்ட குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏவும், தலித் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி கடந்த புதன்கிழமை அஸ்ஸாம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

ட்விட்டா் பதிவு தொடா்பாக அஸ்ஸாமைச் சோ்ந்த பாஜக பிரமுகா் அளித்த புகாரின் பேரில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. குஜராத்துக்கு வந்து மேவானியை கைது செய்த அஸ்ஸாம் காவல் துறையினா் அவரைத் தங்கள் மாநிலத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். 

இதனிடையே, இவ்வழக்கில் அஸ்ஸாம் நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் ஜாமீனில் வெளிவந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் ஜிக்னேஷ் மேவானியை மற்றொரு வழக்கில் அஸ்ஸாம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.