
கோப்புப்படம்
அனுமன் ஜெயந்தியை வைத்து மக்களைப் பிரிக்கும் அரசியலுக்கு எதிராக சிவசேனை போராடும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ஜஹாங்கீர்பூர் பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி ஹிந்து அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் இரு தரப்பிரனர் இடையே மோதல் ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பியது. இந்த சம்பவத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அனுமன் ஜெயந்தி விழாவில் நடந்த வன்முறை சம்பவங்கள் முக்கிய கவனம் பெற்றன.
இதையும் படிக்க | ‘பிரைவேட் பார்ட்டி’: நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்’ திரைப்பட பாடல் வெளியீடு
முன்னதாக இதுகுறித்து பேசிய பாஜக மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் செளபே ராமரின் பெயரை சொன்னதற்காக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனால் பால் தாக்கரேவின் ஆன்மா காயமடைந்திருக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பதிலளித்து பேசிய சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ரெளத், “அனுமன் ஜெயந்தியைப் பயன்படுத்தி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக சிவசேனை போராடும். சிவசேனையின் இந்த நடவடிக்கையால் மறைந்த பால் தாக்கரேவின் ஆன்மா மகிழ்ச்சியடையும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | 'உங்கள் மௌனம்..' பிரதமர் மோடிக்கு எழுதப்பட்ட பகிரங்க கடிதம்
மேலும் அவர், “அனுமன் யார் என்பது எங்களுக்குத் தெரியும். அஷிவினி குமார் செளபே பால் தாக்கரே குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் குறிப்பிட்டுப் பேசினார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...