முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஊர்தியில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பும் இஸ்ரோ

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 
முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஊர்தியில் விண்வெளிக்கு செயற்கைக் கோள் அனுப்பும்  இஸ்ரோ

இஸ்ரோ முதல் முறையாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தியின் மூலம் விண்வெளிக்கு செயற்கைக் கோளினை அனுப்ப உள்ளது. 

இந்த செயற்கைக் கோளினை இஸ்ரோ சென்னையில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்புகிறது. 

பிஎஸ்எல்வி (PSLV) மற்றும் ஜிஎஸ்எல்வி (GSLV) செயற்கைக் கோள் ஊர்திகளின் மூலம் பல செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இந்தியாவின் மிகுந்த நம்பிக்கைக்குரிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தி என பிஎஸ்எல்வி-யினைக் குறிப்பிட்டால் அது மிகையாகாது. அந்த வரிசையில் சிறிய செயற்கைக் கோள் அனுப்பும் ஊர்தியும் இணைய உள்ளது. 

விஞ்ஞானிகள் கடந்த சில வாரங்களாக சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகள் மூலம் 500 கிலோ எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளியில் 500 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்த முடியும். பிஎஸ்எல்வி செயற்கைக் கோள் ஏவும் ஊர்திகளைக் காட்டிலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி 10 மீட்டர் குறைந்த நீளம் கொண்டது. பிஎஸ்எல்வி ஊர்தியின் நீளம் 44 மீட்டராக இருக்க இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியின் நீளம் 34 மீட்டரே ஆகும். அதேபோல அகலத்திலும் இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்தி சற்று குறைவாகவே உள்ளது. பிஎஸ்எல்வி 320 டன் எடையுள்ள செயற்கைக் கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்ல முடியும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியால் 120 டன்கள் மட்டுமே சுமந்து செல்ல முடியும்.
 

இந்த சிறிய செயற்கைக் கோள் ஊர்தியினைக் கொண்டு நாளை (ஆகஸ்ட் 7) புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா சார்பில் மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ள செயற்கைக் கோள் ஆகியவை விண்ணில் ஏவப்பட உள்ளன. இஸ்ரோ சார்பில் மற்ற செயற்கைக் கோள்கள் ஊர்திகளில் ஏவப்படுவதற்கு 25 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்படும். ஆனால், இந்த சிறிய செயற்கைக் கோள் ஏவும் ஊர்திக்கு 5 மணி நேரத்தில் இருந்து நேரக் குறைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, நாளை காலை 4.18 மணி முதல் நேரக் குறைப்பு தொடங்கி சரியாக காலை 9.18 மணிக்கு செயற்கைக் கோள் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தின் முதல் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com