பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ள நோட்டுகள் அதிகரித்ததா? குறைந்ததா?

வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ள நோட்டுகள் அதிகரித்ததா? குறைந்ததா?
பணமதிப்பிழப்புக்குப் பிறகு கள்ள நோட்டுகள் அதிகரித்ததா? குறைந்ததா?


புது தில்லி: வங்கிகளில் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது வெகுவாகக் குறைந்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கள்ளநோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது அதிகரித்துள்ளதா என்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளிலிருந்து கள்ள நோட்டுகள் கடத்திக் கொண்டு நாட்டுக்குள் கொண்டு வரும் சம்பவங்கள் நடந்திருப்பதாக புலனாய்வுத் துறை மூலம் கண்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள போதிலும், வங்கிப் பணிகளின்போது கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்படுவது குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2016 - 17ஆம் நிதியாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 7.62 லட்சமாக இருந்த நிலையில், இது 2020 - 21ஆம் நிதியாண்டில் 2.08 லட்சம் நோட்டுகளாகக் குறைந்துள்ளதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com