

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் கிராமத்து நபர் ஒருவர் மாவோயிஸ்டுகளால் கடத்திக் கொல்லப்படுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: “ கிராமத்தைச் சேர்ந்த நபர் மாவோயிஸ்டுகளால் கடத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கான காரணம் இன்னும் சரியாக தெரியவில்லை. மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டவர் கோபிராம் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்படுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், கோபிராம் கடத்தப்பட்டது குறித்து காவல் துறையில் புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று காலை கிராம மக்கள் கோபிராம் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவல் துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து அவரது உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.” எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.